தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று சமீபத்தில் நடுவானில் பெரும் விபத்தை சந்திக்கவிருந்தது. 137 பயணிகளும் 8 பணியாளர்களும் பயணித்த இந்த விமானம், பறந்து கொண்டிருந்தபோது திடீரென தன் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி தூரம் கீழ்நோக்கி சரிந்தது. எதிர்பாராமல் நடந்த இந்த பயங்கரமான குலுங்கலால் விமானத்தில் பயணம் செய்த இருபது பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தை இயக்கிய முதன்மை பைலட் கஞ்சா போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் நிலைதடுமாறிய நேரத்தில், அவர் முறையான உடைகள் கூட இன்றி விமானிகளின் அறையில் மயங்கிக் கிடந்துள்ளார். மேலும், டெல்லி வந்தடைந்த பிறகு அவருக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையின் போது, எழுந்து நிற்கக் கூட முடியாத அளவுக்கு அவர் மிக மோசமான நிலையில் இருந்துள்ளார்.
விமானம் புறப்படுவதற்கு முன்பாக தாய்லாந்தில் சக ஊழியர்களுக்கு அவர் அளித்த விருந்தின்போதே கஞ்சா பயன்படுத்தியதாகப் பணிப்பெண் ஒருவர் முன்னதாகவே குற்றம் சாட்டியுள்ளார்; தற்போது மருத்துவப் பரிசோதனையிலும் அது உறுதியாகியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விமானிகளுக்கும் கட்டாயம் போதைப்பொருள் பரிசோதனை செய்ய அந்த நிர்வாகம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…
இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…