நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை, அந்தப் பெண்ணே சட்டையைப் பிடித்து நடுரோட்டில் வைத்துப் பாடம் புகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொந்த வேலைக்காக நேரு பிளேஸ் பகுதிக்கு வந்த அந்த இளம் பெண் திரும்பிக் கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் தவறான முறையில் கையை வைத்துப் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனால் கொதித்தெழுந்த அந்த இளம் பெண், எதற்கும் அஞ்சாமல் அந்த நபரின் சட்டைக் காலரைப் பிடித்து உடனடியாகப் பிடித்துக் கொண்டார்.
கூட்ட நெரிசல் மிகுந்த பொது இடத்தில் வைத்து அந்த நபரைத் தட்டிக் கேட்டு வெளுத்து வாங்கியதோடு, அவருக்குத் தக்க பாட புகட்டினார். “தனியாக வரும் பெண்களைப் பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம்; உங்கள் புத்தி மாறாவிட்டால் நடுரோட்டில் அவமானம் தான் மிஞ்சும்” என்ற எச்சரிக்கையோடு சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
சாலையில் திடீரெனக் குறுக்கே பாய்ந்த தெரு நாயால், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்து, எதிரே…
சிவகாசி மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதியிடம் வெறும்…
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, பிரபல சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்களும்,…
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையாவின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட…
விஜய் மீதான விமர்சனம், ஜோதிடக் கருத்துக்கள் மற்றும் அரசியலில் மக்களின் நிலைப்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள 'சிக்ஸ் பிளாக்ஸ் மேஜிக் மவுண்டன்' பொழுதுபோக்கு பூங்காவில், கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு…