கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கொத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமேனஹள்ளி பகுதியில், 2 வயதுக் குழந்தை ஒன்று வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அறையின் கதவு தானாகப் பூட்டிக்கொண்டது. இதனால் குழந்தை வெளியே வர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டு கதறி அழுததால் தாய் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்த உடனடியாக ஹொய்சாலா 176 ரோந்துப் பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலாஜி மற்றும் காவலர் சந்தோஷ் ஆகியோர் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குழந்தையின் தாயாரிடம் நிலைமையைக் கேட்டறிந்த அவர்கள், தாமதிக்காமல் உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் பூட்டப்பட்ட அறையின் கதவைச் சமயோசிதமாக உடைத்துத் திறந்து, உள்ளே தவித்துக்கொண்டிருந்த குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
குழந்தையைப் எவ்வித காயமுமின்றி மீட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினரின் இந்தத் துரிதமான நடவடிக்கையையும் கடமையுணர்வையும் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…