ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, ஒரே மணி நேரத்தில் அடுத்தடுத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்க்காபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் (45) மற்றும் அவரது மனைவி மௌனிகா (35) ஆகிய இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக நந்தியாலை அடுத்த ரோஜாகுண்டா பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி மௌனிகா திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்து மனைவியின் பிணத்தைக் கண்டு உறைந்துபோன கணவன் கிரண், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தீவிர மன உளைச்சலில் விஷம் குடித்துத் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பெருமளவு பணத்தை முதலீடு செய்து ஏமாந்ததும், அதனால் ஏற்பட்ட கடுமையான பண நெருக்கடியுமே தம்பதியின் இந்த முடிவுக்குக் காரணம் எனக் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் திடீரெனக் குறுக்கே பாய்ந்த தெரு நாயால், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்து, எதிரே…
சிவகாசி மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதியிடம் வெறும்…
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, பிரபல சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்களும்,…
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையாவின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட…
விஜய் மீதான விமர்சனம், ஜோதிடக் கருத்துக்கள் மற்றும் அரசியலில் மக்களின் நிலைப்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள 'சிக்ஸ் பிளாக்ஸ் மேஜிக் மவுண்டன்' பொழுதுபோக்கு பூங்காவில், கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு…