“அந்த ஜோசியக்காரனைத் தான் தேடுறேன்.. போட்டா செட்டில் ஆயிடலாம்”…. விஜய்யைக் கலாய்த்து சீமான் அதிரடி….!

Spread the love

விஜய் மீதான விமர்சனம், ஜோதிடக் கருத்துக்கள் மற்றும் அரசியலில் மக்களின் நிலைப்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுராந்தகப் பரப்புரையில் காரசாரமாகப் பேசியுள்ளார். விஜய் ஜோசியக்காரர் பேச்சைக் கேட்டு நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதே ஜோசியக்காரர் தம்மையும் சந்திக்க வந்ததாகத் தெரிவித்தார். “உங்களுக்கு நேரம் வந்துவிட்டது” என்று ஜோசியர் கூறியபோது, “நான் வந்தா பார்த்துக்கிறேன், போயா” என அவரை விரட்டிவிட்டதாகக் கூறிய சீமான், தான் பிறந்த நேரம் கூட சரியாகத் தெரியாது என்றும் தீபாவளி நாளில் பிறந்த தமக்கு ஜாதகக் கணிப்புகள் பொருந்தாது என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.

அரசியல் பயணத்தில் மக்களின் ஆதரவு குறித்துப் பேசிய சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் “பேசாமல் மீண்டும் நடிக்க வந்துவிடுங்கள், மக்கள் உங்களைத் தேடட்டும்” எனக் கூறியதாகக் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த அவர், “மக்கள் தேடியிருந்தால் நான் என்றோ வெற்றி பெற்றிருப்பேனே” எனக் கூறியதுடன், மக்கள் நடித்தால் தான் வாக்களிப்பார்கள் என்றால் தான் மீண்டும் சினிமாவுக்கே சென்று நடிப்பதற்குத் தயார் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார். அத்துடன், தம் பேச்சுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை விடத் திரைப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாகக் கூறித் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

திராவிடக் கட்சிகளின் இலவசத் திட்டங்களைக் கடுமையாகச் சாடிய சீமான், மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் தங்க மோதிரம் வழங்கும் திட்டங்கள் போன்றவை மக்களை ஏமாற்றும் செயல்கள் என விமர்சித்தார். இலவசப் பேருந்துத் திட்டத்திற்காக அரசு ஆண்டிற்கு 10,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்திப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசுக் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் மோதிரம் வழங்குவது வாக்குறுதியை மீறும் செயல் என்றார். விஜய்யும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பழைய ஆட்சி முறையையே பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டிய சீமான், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தமது ஆட்சி அமைந்தால் செயல்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், 750 கோடி ரூபாயில் மருத்துவ உபகரணங்கள், செவிலியர்களுக்குச் சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வழங்கி மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவேன் என்றார். மேலும், அரசு ஊழியர்கள் முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வருவேன் என்றும், மீறினால் ஊதியத்தில் பாதியை பிடித்து விடுவேன் என்றும் எச்சரித்தார். இந்த ஆட்சி முறைக்கே “தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி முறை” என்று பெயர் எனக்கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago