நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள ‘ஹிம்லுங் ஹிமால்’ மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 16 பேர் புதைந்த சம்பவம், உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அப்பகுதியில் பெய்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக மலை உச்சியிலிருந்து திடீரெனப் பிரம்மாண்ட பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வழிகாட்டிகள் மற்றும் முகாம் பணியாளர்கள் உட்பட 16 பேர் 14 அடி ஆழப் பனி மற்றும் இடிபாடுகளுக்குள் கொடூரமாகப் புதைந்தனர்.
தகவலறிந்து விரைந்த நேபாள தேசிய மலை வழிகாட்டிகள் சங்கத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட மீட்புக் குழுவினர், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வழிகாட்டிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 4 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் காட்மண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேலும் 12 பணியாளர்கள் பனிக்குள் சிக்கி மாயமாகியுள்ளனர். பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உறைபனி மற்றும் நிலையின்மை காரணமாக மேலும் பனிச்சரிவுகள் ஏற்படும் ஆபத்து நிலவுவதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாகப் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வானிலை சீரடைந்ததும் மாயமான 12 பேரை மீட்கும் பணிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வரும் சூழலில், சாதியவாத பாமகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது…
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கொத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமேனஹள்ளி பகுதியில், 2 வயதுக் குழந்தை ஒன்று வீட்டிற்குள்…
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…