Categories: சினிமா

Red Card உடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு… முதன்முதலில் சுரேஷ் சக்ரவர்த்தியுடன் live- ல் வந்த பிரதீப்… என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 46 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் ரெட் கார்டுடன் ‘இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற அவப்பெயருடன்  வெளியேற்றப்பட்டவர் தான் போட்டியாளர் பிரதீப். வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்களால் டார்கெட் செய்யப்பட்டு, கமலஹாசனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் பலரும் இணையத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சனி,  ஞாயிறு எபிசோடில்  கமலஹாசன் bully gang-ஐ விமர்சிப்பது போல பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஷோ ஒளிபரப்பாகும் போது ஷோவில் அப்படி எதுவும் இல்லை, ரெட் கார்டு கொடுத்ததில் தனது தவறு எதுவுமே இல்லை என்பதை மட்டும் தான் தெளிவுபடுத்தினார்.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஹாட் ஸ்டாருக்காக இயக்கப்படும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கம் வாய்ப்பை பிரதீபுக்கு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் டைட்டில் ஜெயித்திருந்தால் கூட பிரதீப் இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார். ஆனால் தற்பொழுது இவர் மக்கள் மனத்தில் மிக ஆழமான இடத்தை பிடித்துள்ளார்.

இப்படி இணையத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார் பிரதீப். அவரும் தன் பங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இணையத்தை சூடாக வைத்துள்ளார். இந்நிலையில் பிரதீப் தற்பொழுது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தியின் நேரலையில் அவருடன் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் பிரதீப் இதில் தனது காதலியுடன் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதுதொடர்பான வீடியோ  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

2 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

2 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

3 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

3 மணத்தியாலங்கள் ago