பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 46 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் ரெட் கார்டுடன் ‘இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற அவப்பெயருடன் வெளியேற்றப்பட்டவர் தான் போட்டியாளர் பிரதீப். வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்களால் டார்கெட் செய்யப்பட்டு, கமலஹாசனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் பலரும் இணையத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சனி, ஞாயிறு எபிசோடில் கமலஹாசன் bully gang-ஐ விமர்சிப்பது போல பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஷோ ஒளிபரப்பாகும் போது ஷோவில் அப்படி எதுவும் இல்லை, ரெட் கார்டு கொடுத்ததில் தனது தவறு எதுவுமே இல்லை என்பதை மட்டும் தான் தெளிவுபடுத்தினார்.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஹாட் ஸ்டாருக்காக இயக்கப்படும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கம் வாய்ப்பை பிரதீபுக்கு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் டைட்டில் ஜெயித்திருந்தால் கூட பிரதீப் இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார். ஆனால் தற்பொழுது இவர் மக்கள் மனத்தில் மிக ஆழமான இடத்தை பிடித்துள்ளார்.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள் @TheDhaadiBoy அண்ணா.கடைசில அந்த சிரிப்பு???????? ????????✨❤️#PradeepAntony #Biggbosstamil #Biggbosstamil7 pic.twitter.com/DD9YcUs7MU
— Vignesh Sebastian (@VigneshSebasti3) November 14, 2023
இப்படி இணையத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார் பிரதீப். அவரும் தன் பங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இணையத்தை சூடாக வைத்துள்ளார். இந்நிலையில் பிரதீப் தற்பொழுது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தியின் நேரலையில் அவருடன் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் பிரதீப் இதில் தனது காதலியுடன் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Atlast #PradeepAntony voice in Suresh tatha live thank you @sureshtkumar #BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7 #BiggBoss7Tamil#BiggBossTamilSeason7 #BringBackPradeep pic.twitter.com/38q0sCdY9R
— Sekar ???? (@itzSekar) November 14, 2023
