தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
நடிகை வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொண்டுள்ளார். இன்னொரு வனிதாவாக அவர் தற்பொழுது கலக்கி வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் வனிதா. இவர் தொடர்ந்து தனது இணையதள பக்கத்தில் மகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தும், புகைப்படங்களை வெளியிட்டும், ஆதரவு திரட்டி கொண்டும் வருகிறார்.
அதோடு மட்டுமின்றி தனியார் யூடியூப் சேனல்களுக்கு ரிவியூ செய்தும் வருகிறார். இவர் ரிவியூ செய்வதை பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் வனிதா ரிவியூ செய்த போது, தொகுப்பாளர் சாதாரணமாக கேட்ட கேள்வியை கூட, குதர்க்கமாக புரிந்து கொண்டு, ‘இது என்னுடைய ரிவியூ. உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் மட்டும் கேளு என கூறுகிறார்.
அந்த தொகுப்பாளர் கோபத்தை வெளிக்காட்டாமல் சிரித்து கொண்டே சமாளிக்க,” நீ ஏன் இப்போ சிரிக்குற என நீ சிரிக்குறத பாத்தா விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நக்கலாக பார்ப்பாரே, அப்போ எப்படி கடுப்பா இருக்குமோ அப்படி இருக்கு ” என கூறுகிறார். பின்னர் ‘அந்த தொகுப்பாளரை பிரேமில் இருந்து தூக்குங்க’ என கூறும் வனிதா, அவரை வெளியேற்றிய பின்னர் மீண்டும் தன்னுடைய ரிவியூவை தொடங்கினார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி தற்பொழுது படுவைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நீங்க இவ்ளோ மோசமா கூட நடந்துக்குவீங்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…