தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார்.
சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையே பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலிப்பதாகவும், டேட்டிங்கில் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் விஜய் வர்மாவுடனான தனது காதலை நடிகை தமன்னா உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த பேட்டி ஒன்றில் ‘ஒருவருடன் இணைந்து நடிக்கிறோம் என்பதால் அவர் மீது ஈர்ப்பு வந்துவிடாது. பல நடிகர்களுடன் நான் நடித்துள்ளேன். ஒருவர் யார் மீதாவது காதலில் விழவேண்டும் என்றால் அந்த ஒருவருக்காக எதையாவது உணரவேண்டும்.
நான் எனக்கான உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். இந்தியாவில் ஒரு பெண் தனது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். எனது உலகத்தை புரிந்துக் கொண்ட ஒருவர் கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்’என்று தெரிவித்திருந்தார்.
தற்பொழுது நடிகை தமன்னாவும் , நடிகர் விஜய் வர்மாவும் இணைந்து lust stories என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதன் ப்ரோமோஷனுக்காக நடத்தப்பட்ட கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன் முறைப்படி தொடங்கியுள்ளது. புதிதாகப்…
பிரபல நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, தான் உடல் எடையைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தன்னை 'திருநங்கை போல்…
காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…
தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…