நடிகை சமந்தா மற்றும் முதலமைச்சர் விஜய் இருவரும் திரையில் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்கள் ஆவர். தற்போது ஹைதராபாத்தில் குடியேறியுள்ள சமந்தா, தனது அடுத்த திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ (தமிழில் “எங்கள் தங்கம்”) படத்தின் விளம்பரப் பணிகளுக்காக இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்தடைந்ததும் அவர் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளையும் நெகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பதிவிட்டுள்ள சமந்தா, விஜய் திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஒரு உண்மையான ஹீரோ என்று தான் எப்போதும் நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் அபாரமான எனர்ஜி மற்றும் மக்கள் அவர் மீது காட்டும் அன்பைப் பார்க்கும் போது, அவர் சினிமாவைத் தாண்டி பெரிய விஷயங்களுக்குத் தகுதியானவர் என்பது நிரூபணமாகி உள்ளதாக நெகிழ்ந்துள்ளார். ஒரு புதிய துறையில் முழுமையாகத் தடம் பதிக்கும் அவரது தைரியம் தனக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாகக் கூறியுள்ள அவர், ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையும் அவர்கள் காணும் கனவை விடவும் பெரியதாக அமையலாம் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சிறந்த நினைவூட்டல் என்றும் பாராட்டியுள்ளார்.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…
சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…
மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…