தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன் முறைப்படி தொடங்கியுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மற்றும் அதன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், “ஆளுநர் உரை, தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி மாநிலமாக உருவாக்குவதற்கான திட்ட வரைபடமாக அமைந்துள்ளது. அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசித்துள்ளதைச் சிலர் த.வெ.க – பாஜக இடையேயான உறவு எனக் கூறுகின்றனர். ஆனால், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான மத்திய அமைப்புகளின் கோப்புகளுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் வைத்துள்ளதன் மூலம், பாஜகவிற்கும் திமுகவிற்கும் இடையேதான் நெருக்கமான உறவு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தியே இந்த அரசு செயல்படும், எந்தக் குற்றம் நடந்தாலும் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். மேலும் மின்வாரியச் செயல்பாடு மற்றும் பரந்தூர் விமான நிலையம் குறித்தும் பேசிய அமைச்சர், “மின்வாரியம் தினசரி மின்தடைகள் மற்றும் அவை சரிசெய்யப்படும் நேரத்தை வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது; நேற்று ஏற்பட்ட 52 இடங்களின் மின்தடைகளும் 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் சரிசெய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்காததால் அரசு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன, அதைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன. பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களை அழித்து வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்; இதுகுறித்து ஆய்வு செய்து தேவையான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…