Categories: சினிமா

50 வயதிலும் திருமணத்திற்கு நோ.. 12 நடிகர்களுடன் டேட்டிங்.. 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் பிரபல நடிகை..!

Spread the love

திரையுலகை பொருத்தவரையில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் தப்பித்த நடிகைகள் என்றால் அது ஒரு சிலர் மட்டும்தான். 80 காலகட்டத்தை சேர்ந்த நடிகைகள் பெரும்பாலும் நடிகர்களையோ அல்லது தொழிலதிபர்களையோ திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டனர். 90 காலகட்டத்திற்கு பிறகு நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடிக்க தொடங்கினார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டதால் திருமணம் ஆகி விவாகரத்து பெற்று பிரிந்த பின்னரும் நடித்து வருகிறார்கள். அதனைப் போலவே ஒரு சில பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து காதல் சர்ச்சைகளை எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு நடிகை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அந்த நடிகை வேறு யாருமில்லை பாலிவுட்டின் மூத்த அழகி சுஷ்மிதா சென். இவர் ஹைதராபாத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் மாடலாக் தன்னுடைய வாழ்க்கையை மிக இளம் வயதிலேயே தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இவர் 1996 ஆம் ஆண்டு தஸ்தக் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தன்னுடைய வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளையும் சந்தித்தார்.

தற்போது 50 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 12 நடிகர்களுடன் டேட்டிங் செய்ததாகவும் செய்திகள் வலம் வந்தது. அதில் ரகுமான் சால், ரன்தீப் ஹூடா, விக்ரம் பட் போன்றவர்களின் பெயர்களும் உள்ளது. சமீபத்தில் கூட லலித் மோடியுடன் சுற்றித்திரிந்த இவர் அதன் பிறகு பிரிந்து விட்டார். சுதந்திர சிந்தனையுள்ள இவர் திருமணம் என்பது தனது எண்ணத்திலேயே இல்லை என கூறுகின்றார். திருமணம் செய்து கொள்ளாமல் டேட்டிங் மூலம் காலத்தை கழித்த மூத்த அழகி இரண்டு குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகின்றார்.

அதனைப் போலவே தன்னை காட்டிலும் இளையவர்களுடன் கூட இவர் டேட்டிங் செய்த சம்பவங்களும் உள்ளது. தனக்கு பிடித்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் இவர் சமீப காலமாக சினிமாவில் இருந்தும் விலகி இருக்கின்றார். ஆனால் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றார். தனக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டையும் தன்னுடைய ரசிகர்களுடன் அவர் பகிர்ந்து கொள்கின்றார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago