Categories: சினிமா

கோடை விடுமுறையை கொண்டாட மே 9- இல் ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படங்கள்.. இதோ லிஸ்ட்..!

Spread the love

பொதுவாகவே சம்மர் என்றாலே வரிசையாக திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிடும். மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் படங்களை ரிலீஸ் செய்தால் அதிக வசூல் அள்ளும் என்ற நோக்கத்தில் சம்மர் ஸ்பெஷலாக வரிசையாக படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். சமீபத்தில் மே 1ம் தேதி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் வெளியானது. இதில் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு பெரிதாக எந்த பிரமோஷனும் இல்லாத நிலையில் சப்தமே இல்லாமல் இந்த படம் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மே ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


கஜானா:

இயக்குனர் பிரபதீஸ் சாம்ஸ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் இனிகோ பிரபாகர், வேதிகா, யோகி பாபு நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் மே 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தை இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜா, யோகி பாபு நடித்த இந்த படத்தின் ப்ரோமோஷனற்கு அவர் ஏன் வரவில்லை பணம் கொடுத்தால்தான் அவர் கலந்து கொள்வாரா என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேச இருந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு மத்தியில் கஜானா திரைப்படம் வெளியாக உள்ளது.

நிழற்குடை:

நடிகை தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிழற்குடை திரைப்படத்தில் விஜி நாயகனாகவும் கண்மணி நாயகியாகவும் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஆர்பி குரு தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். குடும்ப உறுப்பினர்களின் மேன்மையை பேசும் படமாக இது உருவாகியுள்ள நிலையில் இந்தத் திரைப்படம் வருகின்ற மே ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வாத்தியார் குப்பம்:

ரஹ்மத் ஷாகிப் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் ரஷ்மிதா ஹிவாரி, காலித், அந்தோணி தாஸ், கஞ்சா கருப்பு மற்றும் மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் இந்தி திரைப்படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாத்தியார் குப்பத்தில் வட இந்திய நிறுவனம் ஒன்று கம்பெனியை திறக்க உள்ள நிலையில் அதனை எதிர்த்து கதாநாயகன் களத்தில் இறங்கி வாத்தியார் குப்பத்தை காப்பாற்றுவது தான் இந்த திரைப்படத்தின் கதை.

என் காதலே:

பரியேறும் பெருமாள், கபாலி, மெட்ராஸ் மற்றும் ஒரு நாள் கூத்து ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் லிங்கேஷ் ஹீரோவாக களமிறங்கி இருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியுள்ளார். ஸ்கை வாண்டார் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக இயக்குனர் ஜெயலட்சுமி இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் மே 9ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

அம்பி:

நகைச்சுவையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் எல்வின் இயக்கியுள்ளார். அம்பியாக இருக்கும் ரோபோ சங்கர் ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரிய வீரன் என அனைவரும் நம்பும் நிலையில் உண்மையில் அவர் வீரன் இல்லை என்பது அம்பிக்கு மட்டும் தான் தெரியும். இந்த சூழலில் மற்றவர்களிடம் மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி மாறுகிறார் என்பது தான் படத்தின் கதை.

 

சவுடு:

இயக்குனர் ஜெயந்தன் அருணாச்சலம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் போண்டாமணி, கிளி மூக்கு ராமச்சந்திரன், மீசை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் இளம் பெண்கள் தொடர்ந்து காணாமல் போவதால் ஊரில் உள்ள அனைவரும் கவலை அடையும் நிலையில் பெண்கள் காணாமல் போவது ஏன் அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

எமன் கட்டளை:

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜுனன், ஆர் சுந்தர்ராஜன், நளினி, வையாபுரி மற்றும் பவர் ஸ்டார் உள்ளிட்ட நடித்துள்ள நிலையில் இந்தத் திரைப்படம் மே ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இரு நண்பர்கள் செய்த தவறால் ஒரு பெண்ணின் திருமணம் நின்று போகும் நிலையில் பெண்ணின் தந்தை விஷம் குடித்து விடுகின்றார். இதைக் கேள்விப்படும் அன்பு வேதனையில் தற்கொலை செய்து எமலோகம் சென்று அங்கு எமதர்மராஜா கட்டளை படி 60 நாட்களுக்குள் இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் கதை.

கலியுகம்:

அறிமுக இயக்குநரான ப்ரமோத் சுந்தர் இயக்கி ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர், இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம் கலியுகம். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. அதே போல யாமன் என்ற  திரைப்படமும் வரும் 9ந் தேதி வெளியாக உள்ளது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

6 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago