தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு ஒரு அட்வைஸ் வழங்கியுள்ளார். அதில், இந்த காலத்தில் பெண்கள் கணவரை தேட வேண்டும் என்றால், காசு இருக்கா, அவன் ரொம்ப நல்லா சம்பாதிக்கிறானா, நல்லா படிச்சவனா, எவ்வளவு வெள்ளையா இருக்கான் நல்லா உயரமா இருக்கானா என இதெல்லாம் பார்க்காதீங்க. நல்ல மனுஷனா என்று பாருங்கள்.
உனக்கு நாலு பேரு முன்னாடி மரியாதை கொடுத்து நல்லா நடத்தக்கூடியவரா என்று பாருங்க. எந்த இடத்திலும் எதுக்காகவும் உனக்கு அவமானம் வர மாதிரி அவர் நடந்து கொள்ள மாட்டாரா என்பதை கவனிங்க. உன்ன நல்லா பாத்துப்பானா, உங்க அப்பா அம்மா வீட்ல இருக்க அதே சுதந்திரம் கல்யாணத்துக்கு அப்புறம் அவனோட வீட்லயும் கிடைக்குமா என்ற எல்லாத்தையும் பாருங்க. இப்படி இருக்க வந்தான் மாப்பிள்ளை. இல்லனா கல்யாணமே வேண்டாம் என்று சரண்யா பொன்வண்ணன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…