Categories: சினிமா

ஆதிக்கம் செலுத்தும் OTT தளங்கள்… இன்றைய தமிழ் சினிமாவில் பட ரிலீஸ் தேதிகள் தள்ளி போவதற்கான காரணம் என்ன…?

Spread the love

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் பார்க்க போனால் பட ரிலீஸ் தேதி என்று அறிவிக்கிறார்கள். பின்னால் அதை தள்ளி வைக்கிறார்கள். ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைகிறார்கள். எதற்காக இந்த ரிலீஸ் தேதிகளில் இத்தனை குழப்பம். OTT தளங்கள் தான் இதற்கெல்லாம் காரணமா? அவை ஆதிக்கம் செலுத்துகிறதா என்பதை பற்றி இனி காண்போம்.

உண்மையில் பார்க்க போனால் படம் ரிலீஸ் தேதிகளில் OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்துகிறதா என்று கேட்டால் ஆம் அது உண்மைதான். ஏனென்றால் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இந்த OTT தளங்களில் படம் ரிலீஸ் என்பதே கிடையாது. அப்போது அவர்கள் அறிவித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்வார்கள். கொரோனா காலகட்டத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போனதால் படங்கள் அனைத்தும் OTT யில் வெளியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தற்போது அதுவே வழக்கமாக மாறிவிட்டது. என்னதான் தியேட்டரில் சென்று படம் பார்த்தால் கூட மக்கள் வீட்டிலேயே தங்களது டிவியில் விருப்பமான தின்பண்டங்களை கையில் வைத்து தனிமையாக தங்கள் விருப்பப்பட்ட நடிகர்களின் படங்களை OTT யில் பார்ப்பதற்கு விரும்புகிறார்கள். இதற்கான மவுசும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அதனால் ஒரு படத்தை எடுத்து முடித்த பின்பு அதை ரிலீஸ் செய்து தயாரிப்பாளர் எப்படி லாபம் ஈட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ அதேபோல அந்த படத்திற்கு பல கோடி முதலீடு செய்து வாங்கும் OTT தளங்களும் லாப நோக்கத்தையே மையமாகக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு படத்தை இப்போதுதான் OTT யில் ரிலீஸ் செய்ய வேண்டும் அதற்கு அடுத்ததாக ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதற்கு இவ்வளவு கால இடைவேளை இருக்க வேண்டும் அப்பொழுதுதான் லாபம் பெற முடியும் என்று ஒரு ஷெட்யூல் வைத்து அதன்படி நடக்கிறார்கள்.

ஏற்கனவே விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் என்று கூறி தற்போது பிப்ரவரி 6க்கு ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்கள்.GoodBadUgly திரைப்படம் ஏப்ரல் 10 வருவதாக இருக்கிறது. வீரதீரசூரன் மார்ச் 27ஆம் தேதி வருவதாக கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாகாமல் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு தள்ளப்பட்டதால் இதன் காரணமாக GoodBadUgly திரைப்படம் ரிலீஸ் தள்ளி போகலாம் என்று பேச்சுக்கள் நிலவி வருகிறது. இதற்கு காரணம் இந்த படத்தை வாங்கி இருக்கும் Netflix OTT தளம் தான் என்றும் கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதம் விடாமுயற்சி ரிலீஸ் ஆன பிறகு அதற்கு அடுத்ததாக இரண்டு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதம் அது OTTயில் வெளியாகும். அந்த மாதம் GoodBadUgly வெளியானால் அதிலிருந்து மே மாதமோ ஜூன் மாதமோ GoodBadUgly படத்தை OTT யில் ரிலீஸ் செய்தால் கண்டிப்பாக விடாமுயற்சி டவுன் ஆகும் லாபம் ஈட்ட முடியாது. இதற்கிடையில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருப்பதால் அதை நடுவில் ரிலீஸ் செய்தாலும் அவர்கள் சரியான லாபம் பார்க்க முடியாது என்று தற்போது GoodBadUgly, வீரதீர சூரன் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க கோரி Netflix தயாரிப்பாளர்களிடம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற படம் ரிலீஸ் தேதிகளில் OTT தளங்கள் தலையீடு செய்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நிதர்சனமான உண்மையாக இன்றைய சினிமாவில் நடந்து கொண்டு இருக்கிறது.

admin

Recent Posts

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

47 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

52 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

59 minutes ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

1 மணத்தியாலம் ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

1 மணத்தியாலம் ago