BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

Spread the love

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக தரப்பில் சரமாரியான புகார்கள் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வ புகார்கள் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ஜுனன், திமுக பகுதி செயலாளர் வீட்டில் சுமார் 3 கோடி ரூபாய் பணம் இருப்பதாக இரவு 8 மணிக்கே பறக்கும் படைக்குத் தகவல் கொடுத்தும், அவர்கள் 11 மணிக்கு மேல்தான் சம்பவ இடத்திற்கு வந்ததாகக் குற்றம் சாட்டினார். “பறக்கும் படை என்றால் பறந்து வர வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாகவும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கோவையில் உள்ள விடுதிகளில் தங்கி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்மன் அர்ஜுனன், தேர்தல் அதிகாரிகள் மீது தமக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்றும், மாவட்ட தேர்தல் அதிகாரி நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்தார். திமுகவினர் காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து ரவுடியிசம் செய்வதாகவும், மக்களைப் பணத்தால் அசிங்கப்படுத்தும் இந்தச் சூழலில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“கோவை ஒரு அமைதியான பூமி, அதை கலவர பூமியாக்கச் சிலர் முயற்சிக்கிறார்கள்” என்று குறிப்பிட்ட அவர், சாதாரண மக்களைத் துன்புறுத்தும் அதிகாரிகள், பணப்பட்டுவாடா புகார்கள் மீது மட்டும் மௌனம் காப்பது ஏன் என்று வினவினார். நேர்மையான முறையில் தேர்தல் நடத்தச் சூழல் இல்லாததால், தேர்தலை ரத்து செய்துவிட்டு அமைதி திரும்பிய பிறகு நடத்த வேண்டும் என்பதே அதிமுக மற்றும் பாஜகவினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த தர்ணா போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அப்பகுதியே பரபரப்பாகக் காணப்படுகிறது.

Nanthini

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

22 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago