சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார். 75 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் மீது ஒருவித பாசம் இருப்பதாகவும், அதனால்தான் அவரது விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் ஒரு குழந்தையைப் போல நினைத்து விட்டுவிடுகிறார் என்றும் ஆர்த்தி தெரிவித்தார். மேலும், சட்டசபை என்பது நடனம் ஆடுவதற்கான இடமல்ல என்றும், முறையான அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.
சினிமா படப்பிடிப்பு போல அரசியல் என்பது குறிப்பிட்ட நேரத்தில் முடிந்துவிடும் வேலையல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் யாரிடமும் பேசாமல் வெறும் முகத்தைப் பார்த்து மட்டும் வாக்களிக்க முடியாது என விஜய்யைக் கிண்டல் செய்தார். அனுபவம் இல்லாத மருத்துவரிடமோ அல்லது ஓட்டுநரிடமோ நாம் எப்படி உயிரைப் பணையம் வைக்கமாட்டோமோ, அதேபோல் அரசியலே தெரியாத ஒருவரிடம் ஆட்சியைக் கொடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் திமுகவின் அனுபவமே சிறந்தது என்றும், வரும் தேர்தலில் மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான இறுதிச்சடங்கு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…
தமிழகத் தேர்தல் களம் உச்சகட்ட வெப்பத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில்,…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத்…
மைசூரு மாவட்டம் சரகூரு பகுதியில் உள்ள கூர்னேகால் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜவரப்பா, கடந்த சில தினங்களுக்கு முன்பு…
மனிதர்களாகிய நாம் இன்று உலகைக் காண்பதற்கு அடிப்படையாக விளங்கும் இரண்டு கண்கள், திடீரென உருவான ஓர் உறுப்பு அல்ல. ஜெர்மனியின்…
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், தேர்தல் விதிமீறல்களைத் தவிர்க்கவும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை…