ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மிகக்கடுமையாகச் சாடினார். நீண்ட காலம் அதிமுகவில் இருந்து அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, இப்போது கட்சிக்குத் துரோகம் இழைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். செங்கோட்டையன் போன்றவர்களின் சுயநலப் போக்கை மக்கள் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட இபிஎஸ், அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் துரோகிகளுக்கு இடமில்லை என ஆவேசமாக முழங்கினார்.
செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கைக்குப் முகவரி கொடுத்ததே அதிமுகதான் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிகாரத்திற்காகக் கட்சி மாறியுள்ள அவரது செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார். மேலும், அதிமுகவின் பலம் தொண்டர்களிடம் தான் உள்ளதே தவிர, விலகிச் சென்ற சில தலைவர்களிடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். வரும் தேர்தலில் துரோகத்தை வீழ்த்தி அதிமுக மகத்தான வெற்றி பெறும் எனத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…