இந்த காலத்து பெண்கள் வரப்போற புருஷன் இப்படி இருக்கானானு பாருங்க.. சரண்யா பொன்வண்ணன் கொடுத்த அட்வைஸ்..!

By Nanthini on மாசி 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Saranya Ponvannan longs for a boy child she is the same jalra mom in  reality | Saranya Ponvannan : நிஜத்திலும் நான் ஜால்ரா அம்மா தான்... ஆம்பள  பிள்ளை இல்லையே ரொம்ப ஏக்கமா இருக்கு ...

   

இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு ஒரு அட்வைஸ் வழங்கியுள்ளார். அதில், இந்த காலத்தில் பெண்கள் கணவரை தேட வேண்டும் என்றால், காசு இருக்கா, அவன் ரொம்ப நல்லா சம்பாதிக்கிறானா, நல்லா படிச்சவனா, எவ்வளவு வெள்ளையா இருக்கான் நல்லா உயரமா இருக்கானா என இதெல்லாம் பார்க்காதீங்க. நல்ல மனுஷனா என்று பாருங்கள்.

   

2 மகள்களும் டாக்டர்': சரண்யா பொன்வண்ணன் ஃபேமிலி ஸ்டோரி

 

உனக்கு நாலு பேரு முன்னாடி மரியாதை கொடுத்து நல்லா நடத்தக்கூடியவரா என்று பாருங்க. எந்த இடத்திலும் எதுக்காகவும் உனக்கு அவமானம் வர மாதிரி அவர் நடந்து கொள்ள மாட்டாரா என்பதை கவனிங்க. உன்ன நல்லா பாத்துப்பானா, உங்க அப்பா அம்மா வீட்ல இருக்க அதே சுதந்திரம் கல்யாணத்துக்கு அப்புறம் அவனோட வீட்லயும் கிடைக்குமா என்ற எல்லாத்தையும் பாருங்க. இப்படி இருக்க வந்தான் மாப்பிள்ளை. இல்லனா கல்யாணமே வேண்டாம் என்று சரண்யா பொன்வண்ணன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.