Categories: சினிமா

“என்றாவது ஒரு நாள்”.. ரத்தன் டாடாவை நேரில் பார்க்க ஆசைப்பட்ட பிரபல நடிகை.. கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை..!

Spread the love

கடந்த 1937-ஆம் ஆண்டு ரத்தன் டாடா பிறந்தார். இவர் கார்னல் கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த 1961 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் கம்பெனியில் தனது பணியை தொடங்கி 1991 ஆம் ஆண்டு டாடா குடும்பத்தின் தலைவராக பொறுப்பேற்றார். பிற தொழிலதிபர்களை போல் சொத்துக்களை சேர்ப்பது, சாம்ராஜ்யத்தை உருவாக்குவது என ஆடம்பரமாக வாழ ரத்தன் டாட்டா விரும்பவில்லை. இவரது தலைமையில் டாட்டா குழுமம் உலகம் முழுவதும் பிரபலமானது.

தனது வருமானத்தில் 60 முதல் 65 சதவீத பங்கை ரத்தன் டாட்டா தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது ரத்தன் டாட்டாவுக்கு 2008-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சுமார் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். டாட்டா நிறுவனம் பைனான்சியல், மெட்டல், ஆட்டோ மோட்டிவ் கன்சியூமர், ரீடைல் செக்டர், டிராவல், டெலிகாம், ஐடி என அனைத்திலும் வெற்றி கண்டது. இப்படி புகழ் மிக்க இந்தியாவின் பிரபல தொழிலதிபாரான ரத்தன் டாட்டா உடல் நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் ரத்தன் டாடா பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள நடிகை சாய் பல்லவி, கடந்த ரெண்டு வருஷமா எனக்குள்ள ஒரு ஆசை வந்துருச்சு. எப்படியாவது ஒரு நாள் ரத்தன் டாடாவை நேரில் சந்தித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் அவருடைய நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறாமலேயே போய்விட்டது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago