பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடித்து வந்த நடிகை திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும் பிரபலங்கள் தங்கள் சினிமா வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கையை சரியாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பொதுவெளியில் ரசிகர்களிடம் பெரிய அளவில் அடி வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஒரு பிரச்சனையில் சிக்கினால் ரசிகர்கள் விமர்சித்தே அவர்களை காலி செய்து விடுவார்கள். இப்படியான நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்திருந்த ரிஹானா பேகம் குமாரவேலின் அம்மாவாக நடித்து வந்தார்.
அதன் பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார். அடிக்கடி பரபரப்பாக பேட்டி கொடுப்பதில் இவர் முக்கிய லிஸ்டில் இருந்தவர். இப்படியான நிலையில் இவர் மீது திருமண மோசடி புகார் வந்துள்ளது. முதல் கணவர் இருக்கும்போதே விவாகரத்து வாங்காமல் ராஜ்கண்ணன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவரிடம் கல்யாணத்திற்கு முன்பு ஒன்பது லட்சம், google பே மூலமாக ஒன்பது புள்ளி ஐந்து லட்சமும் வாங்கியுள்ளார்.
ராஜ் கண்ணன் திருமணத்திற்கு பிறகு தனது வீட்டுக்கு வர சொல்லிய நிலையில் தான் சின்னத்திரை நடிகை பிறருடன் நெருக்கமாக பழக வேண்டி இருக்கும் அதனை எதுவும் கண்டுகொள்ள கூடாது என்று பேசி ரீஹானா திமிர் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு முதல் திருமணத்தில் விவாகரத்து கிடைக்கவில்லை என்றும் பணத்திற்காக தன்னை ஏமாற்றியதாகவும் தெரிந்து கொண்ட ராஜ் கண்ணன் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது…
அதிமுகவின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் அசுர பலமிக்க அரசியல் முகமுமான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மீதான தனது…
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ப்ளூம்ஃபீல்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்குழு இயக்குநர் டேனியல் பர்பேங்க் (37) என்பவர்,…
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்திப் புயல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் வலுவான…
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், முன்னணி AI நிறுவனங்களான OpenAI மற்றும்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும்…