என்னம்மா இதெல்லாம்?.. திருமண மோசடியில் தொழிலதிபரிடம் 18.5 லட்சத்தை அபேஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை..!

By Nanthini on ஆனி 16, 2025

Spread the love

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடித்து வந்த நடிகை திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும் பிரபலங்கள் தங்கள் சினிமா வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கையை சரியாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பொதுவெளியில் ரசிகர்களிடம் பெரிய அளவில் அடி வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஒரு பிரச்சனையில் சிக்கினால் ரசிகர்கள் விமர்சித்தே அவர்களை காலி செய்து விடுவார்கள். இப்படியான நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்திருந்த ரிஹானா பேகம் குமாரவேலின் அம்மாவாக நடித்து வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா மீது திருமண மோசடி புகார்..  ஏமாந்ததாக தொழிலதிபர் வழக்கு | Actress Rihana Begum Faces Marriage Fraud  Complaint at Poonamallee Police ...

   

அதன் பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார். அடிக்கடி பரபரப்பாக பேட்டி கொடுப்பதில் இவர் முக்கிய லிஸ்டில் இருந்தவர். இப்படியான நிலையில் இவர் மீது திருமண மோசடி புகார் வந்துள்ளது. முதல் கணவர் இருக்கும்போதே விவாகரத்து வாங்காமல் ராஜ்கண்ணன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவரிடம் கல்யாணத்திற்கு முன்பு ஒன்பது லட்சம், google பே மூலமாக ஒன்பது புள்ளி ஐந்து லட்சமும் வாங்கியுள்ளார்.

   

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா மீது திருமண மோசடி புகார்..  ஏமாந்ததாக தொழிலதிபர் வழக்கு | Actress Rihana Begum Faces Marriage Fraud  Complaint at Poonamallee Police ...

 

ராஜ்  கண்ணன் திருமணத்திற்கு பிறகு தனது வீட்டுக்கு வர சொல்லிய நிலையில் தான் சின்னத்திரை நடிகை பிறருடன் நெருக்கமாக பழக வேண்டி இருக்கும் அதனை எதுவும் கண்டுகொள்ள கூடாது என்று பேசி ரீஹானா திமிர் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு முதல் திருமணத்தில் விவாகரத்து கிடைக்கவில்லை என்றும் பணத்திற்காக தன்னை ஏமாற்றியதாகவும் தெரிந்து கொண்ட ராஜ் கண்ணன் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.