பொதுவாகவே செல்ல பிராணிகளில் நாய்களுக்கு இருக்கும் குணம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை அதற்கு ஏதாவது உதவி செய்துவிட்டார் அல்லது உணவு அளித்து விட்டால் எப்போதுமே அது அந்த நபரை மறந்து விடாது. அந்த அளவிற்கு நாய்க்கு நல்ல குணம் உண்டு. அதேசமயம் தன்னை வளர்த்த ஓனர் எங்கிருந்தாலும் அவரை அது எளிதில் மறந்து விடாது. அவருடைய வாசமும் எப்போதும் அதற்கு பழக்கப்பட்டதுதான்.
தெலுங்கானாவில் வளர்ப்பு நாயை வீட்டிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் உரிமையாளர் விட்டு விட்டு வந்துள்ளார். திரும்ப வந்து விடக்கூடாது என்பதற்காக கார் கண்ணாடியை மூடி வைத்துள்ளார். ஆனால் பாசத்திற்காக ஏங்கி தவித்த அந்த ஜீவன் ஐந்து நாட்களில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளது. தன்னை வளர்ப்பவர்கள் மீது நாய்கள் அளவு கடந்த பாசம் வைத்தாலும் அந்த ஜீவன்களை மனிதர்கள் சரியாக புரிந்து கொள்வதில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை
