தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. 90 காலகட்டத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய திரை உலகில் தனக்கென்று தனிமுத்திரையை பதித்தவர். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சினிமா துறையில் நீண்ட நாட்களாக பயணித்துக் கொண்டிருப்பவர் தான் மீனா.
இப்படியான நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் மீனா ஜோடியாக நடித்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி. அந்த திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றின் மீனா பகிர்ந்து உள்ளார். அதில், அப்போதைய காலத்தில் கமல் சார் படம் என்றால் லிப் டு லிப் கிஸ் சீன் கட்டாயம் இருக்கும் என்று கூறுவார்கள். அவ்வை சண்முகி படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முன்பு எனக்கு அதை ஞாபகத்தில் இல்லை. இரண்டாவது நாள் படப்பிடிப்பு நடந்தபோது முத்தக்காட்சி படமாக்கப்பட உள்ளதாக உதவி இயக்குனர் கூறினார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/21/9lKmQByTUFrHuE0UcvhD.jpg)
அதனை கேட்டதும் எனக்கு பயமாக இருந்தது. இந்த காட்சியில் நடிப்பதற்கு நான் தயாராக இல்லை என்று இயக்குனரிடம் கூறுமாறு என் அம்மாவிடம் கேட்டேன். என் அம்மாகிட்ட சொல்லிட்டு அழுதுட்டேன். இந்த காட்சியில் என்னால் நடிக்க முடியாது உடம்பெல்லாம் மடங்குது என்று கூறினேன். பிறகு கே எஸ் ரவிக்குமார் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் பயத்துடன் படபிடிப்பு இடத்திற்கு சென்றேன். ஆனால் அந்த காட்சியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்தேன். அந்த சமயத்தில் கமல்ஹாசன் முத்தம் கொடுப்பது போல நடித்துவிட்டு இப்போது வேண்டாம் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருந்தது என்று மீனா கூறியுள்ளார்.
