சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

By Mahalakshmi on மே 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ரெஜினா. அந்த வகையில் தற்போது கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றார்.

   

கடந்த சில தினங்களுக்கு முன்பு புடவையில் தூய்மை பணியில் ஈடுபட்டதோடு நேற்று நடந்த நிகழ்வில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றார், இதற்காக அவர் எஸ்யுபி என்ற மெரினா கிளபுடன் சேர்ந்து இந்த பணியை செய்து வருகின்றார். இது குறித்து பேசிய அவர் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல் செய்யும் பணி.

   

 

இதற்காக மெரினாக்களப்பை சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். எனக்கு இந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது 12 வயதான சிறுவன் அனீஸ் தான். இந்த குழுவை வழிநடத்தும் அனீஸ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார். மேலும் கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றி விடக்கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர்நிலைகள் நமக்கு மிகவும் முக்கியமானவை. அதை களங்கடிக்க கூடாது. இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்து இந்த குழுவினரோடு இணைந்து இதனை செய்தேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.