Connect with us

CINEMA

இவ்ளோ நாளா எங்கப்பா இருந்த?… நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அழியாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாகுபலி திரைப்படத்தில்  ராஜமாதா சிவகாமி தேவியாக தோன்றி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

 

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி நடிப்பதில் ரம்யா கிருஷ்ணன் நிகர் வேறு யாரும் இல்லை. இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்ன திரையில் சீரியல்களிலும், பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இதுவரை 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.

தற்பொழுது நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல சேனல் ஒன்று நடத்திய பேட்டி ஒன்றில் தன் மகனுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது?’ என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top