தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்தி இத்தானி.
தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு என்கின்ற திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
அடுத்ததாக ஆர்யாவுடன் காதர் பாட்ஷா என்கின்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
ஹோம்லி மற்றும் மாடர்ன் லுக்கில் வளம் வரும் சித்தி இத்னானி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
குறிப்பாக இவரது கன்னத்தில் விழும் குழிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது பெட்டில் படுத்துக்கொண்டு ஹாயாக போஸ் கொடுத்திருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.