தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த’ கனெக்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்பொழுது இவர் ஜவான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து ‘டெஸ்ட்’ திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்கள் இருவரும். ஆனால் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த அவர்கள் தங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். நயன்தாரா தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் சூட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து இருவரும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்த வண்ணம் உள்ளனர். நடிகை நயன்தாரா தற்பொழுது முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். மேலும் அவர் தனது முதல் பதிவாக தனது குழந்தைகளின் முகத்தை வெளிஉலகிற்கு வீடியோவாக வெளியிட்டு காட்டியுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…