தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துக் கலக்கியவர் நடிகை லைலா. இவர் ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதைத் தொடர்ந்து காமராசு, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இவருக்கு பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. விக்ரம், சூர்யா, அஜித், பிரபுதேவா போன்ற பிரபல தமிழ் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் லைலா. அதன் பின்னர் சரியான பல வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
இவர் 2006 இல் மேஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை லைலா. இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…