தமிழ், தெலுங்கு என திரையுலகையே கலக்கி வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்பது தான் ஆசை. பள்ளியில் படிக்கும்போதே தனது அம்மாவிடம் ‘நான் சூர்யாவுக்கு ஜோடியாக ஒருநாள் நடிப்பேன்’ என சொன்னாராம். சொன்னது போலவே கோலிவுட்டில் நுழைந்து அதை நிரூபித்தும் காட்டினார்.
விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்தார். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். தனுஷுடன் தொடரி, விஷாலுடன் சண்டக்கோழி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல், சிவகார்த்திகேயனோடு இவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக இருக்கிறது.
மேலும், இவர் தெலுங்கு சினிமாவிலும் கலக்கி வருகிறார். அங்கு பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை எனில் இயக்குனர்கள் அழைப்பது கீர்த்தி சுரேஷை தான்.தமிழிலும் பெண் குயின், சாணி காயிதம் என சில படங்களில் பெண்ணிற்கு முக்கியத்துவம் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அவ்வப்போது அழகை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து மஞ்சள் நிற புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனசை கலைத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.