Connect with us

CINEMA

“சங்கரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டேனோ” பயந்துபோன கேஎஸ் ரவிக்குமார்…. திருப்புமுனையாக அமைந்த வெற்றி படம்….!!

2008 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தசாவதாரம். கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் கதையை எழுதியதில் கமல்ஹாசனுக்கும் பங்கு உண்டு.

இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் ஆரம்பித்தபோது சிறிய அளவில் தான் தொடங்கியுள்ளார். ஆனால் கதாபாத்திரங்களை தேர்வு செய்த பிறகு அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு கதை நீண்டு கொண்டே சென்றுள்ளது.

   

அதற்கேற்றார் போல் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. அதே போல் படமும் வெற்றி படமாக தான் அமைந்தது. 60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றி படமாக திகழ்ந்தது.

கேஎஸ் ரவிக்குமார்

#image_title

இந்த படத்தின் இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் தசாவதாரம் பற்றி நேரலை ஒன்றில் பேசியிருந்தார். அப்போது கூறிய அவர் இந்த படம் பெரிய அளவில் போனபோது தான் மிகவும் பயந்ததாகவும் கமல்ஹாசன் தான் தனக்கு தைரியம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ராமராஜனை பார்த்து ரஜினியே பயந்து போனார் ; முதல்முறையாக உண்மையை சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்

அதோடு பிரம்மாண்டமாக படம் தயாராகுகிறதே சங்கரைப் பார்த்து தானும் சூடு போட்டுக் கொண்டோமோ என்று பயந்ததாகவும் கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார். ஆனால் அவர் பயந்தபடி இல்லாமல் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது.

author avatar
indhuramesh
Continue Reading

More in CINEMA

To Top