ராமராஜனை பார்த்து ரஜினியே பயந்து போனார் ; முதல்முறையாக உண்மையை சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்

By Deepika

Published on:

ரஜினி, கமல் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டியாக விளங்கியவர் தான் நடிகர் ராமராஜன். அவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட். யாராவது பளிச்சென உடை அணிந்தால் உனக்கு என்ன ராமராஜன் என நினைப்பா என்று கூட கேட்பார்கள், அந்தளவுக்கு ராமராஜனுக்கு என தனி அடையாளம் இருந்தது. கிராமத்து படங்களில் நடித்து அனைத்து கிராமத்து மக்களையும் ரசிகர்களாக பெற்றவர் தான் ராமராஜன்.

Ramarajan

மக்கள் நாயகம் என போற்றப்பட்ட ராமராஜனின் படங்கள் இன்றும் பலருக்கு பிடிக்கும். குறிப்பாக எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானது. மாடை பிடித்து கொண்டு செண்பகமே செண்பகமே என அவர் பாடும் பாடம் இன்றும் ட்ரெண்டிங் தான். அப்படிப்பட்ட ராமராஜன் பல வருடங்களுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

   
KS Ravikumar about rajini and ramarajan

ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள சாமானியன் படத்தின் ஆடியோ லான்ச் நடந்தது. இதில் பேசி கே.எஸ்.ரவிக்குமார் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவ கூறியதாவது, ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து, நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார்.

Saamaniyan audio launch

நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்சன் சொன்னது ராமராஜனுக்கு தான். ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன்.

அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார். நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம்.

author avatar
Deepika