Connect with us

CINEMA

மும்பை அப்டினா, சென்னை இப்டியாம்.. வித்யாசமான ஒரு விளக்கம் கொடுத்த நடிகை ஜோதிகா…

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் நடிகை ஜோதிகா. வழக்கமான ரஜினி படங்களுக்கு அவர் பெயர்தான் டைட்டிலாக இருக்கும். ஆனால் கதையின் முக்கியத்துவம், நாயகியின் நடிப்பாற்றலை கவனித்து அந்த படத்துக்கு நடிகையின் கேரக்டர் பெயரை வைக்க ரஜினி சம்மதித்தார் என்றால் அதுதான் சந்திரமுகி. அப்படி ஒரு சிறந்த நடிகையாக ஜோதிகா தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார் அதன்பிறகும் அவ்வப்போது நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். நல்ல கதைகளை, நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். அந்த வகையில் ஜோதிகா, மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடித்த காதல் தி கோர் சமீபத்தில் வெளியானது. சிறந்த வெற்றிப்படமாக பேசப்படுகிறது.

   

தனது குடும்ப வாழ்க்கை, சினிமா பயணம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகை ஜோதிகா கூறியதாவது. எங்கள் வீட்டை பொருத்த வரை லஞ்ச் சும், டின்னரும் ஒரே டேபிளில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். அது தொடர்ந்து நடக்கிறது. சிவக்குமார், சூர்யா, கார்த்தி எல்லோருமே பிஸியாக இருந்தாலும், உள்ளூரில் இருந்தால் எல்லாருமே ஒன்றாக மொத்த குடும்பமாக உட்கார்ந்து லஞ்ச், டின்னர் சாப்பிடுவோம். நான் இந்த பேமிலி கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்.

எனக்கு மும்பை பிறந்த ஊர். அம்மா மாதிரி அந்த ஊரை என்னால் மறுக்க முடியாது. நான் பிறந்து வளர்ந்த ஊர் அதுதான். அதுபோல் எனக்கு சென்னை அப்பா மாதிரி. இந்த ஊர்தான் எனக்கு பாதுகாப்பு கொடுத்தது. எனக்கான தொழிலை கொடுத்தது. என்னை இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்தியது. அந்த வகையில் இரண்டுமே எனக்கு மிக முக்கியமான ஊர்கள்தான். சென்னை தான் எனக்கு வாழ்க்கையில் நிறைய கொடுத்தது. அதனால் இரண்டு ஊர்களையும் என் அப்பா, அம்மா என்றுதான் குறிப்பிடுவேன், என்று சென்டிமென்டாக கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top