பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை சாயா சிங். கடந்த 2003 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருடா திருடி’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். சினிமாவில் அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு கன்னட மொழியில் சின்னத்திரைகளிலும் நடித்த வருகின்றார்.
சாயா சிங்கின் குடும்பம் தற்போது பெங்களூரில் உள்ள பவேஸ்வர் நகரில் வசித்து வருகிறது. தற்போது சோயாசிங் அமிர்தரே என்கின்ற கன்னட சீரியல் நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளிவர இருக்கும் சிவராஜ்குமாரின் படத்திலும் நடித்து வருகின்றார். இவரது கணவர் கிருஷ்ணா தெய்வமகன் சீரியலில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாயா சிங் அவரின் தாயார் சாமான லதா வீட்டில் 66 கிராம் தங்க நகைகள், 150 கிராம் வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பொருட்கள் திருடப்பட்டது. இது குறித்து பசவேஸ்வர நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது சாயா சிங் வீட்டின் வேலை பார்த்து வந்த உஷா என்ற பெண் நகைகளை திருடியது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். வேலை செய்யாத நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடியுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து உஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.