Connect with us

CINEMA

8 மாத கர்ப்பிணி நடிகை.. டாக்டராக இருந்தும் மாரடைப்பால் இறப்பு.. இதய நிபுணர்கள் கூறுவது என்ன..?

இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்கள் மன அழுத்தத்திற்கு அளக்கிறார்கள். பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை டாக்டர் திவ்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றி இருந்தாலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இதய பாதிப்புகள் குறித்து பல்வேறு கேள்வி எழுகிறது.

   

பாரம்பரியமாக பெண் ஹார்மோன்கள் இதயத்தை பாதுகாப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது இளம் பெண்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். டாக்டர் பிரியாவின் இதயம் செயலிழந்து காணப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைத்து இளம் பெண்களும் அடிப்படை இதய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இது குறித்து மும்பை நானாவதி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருதய நோய் நிபுணர் டாக்டர் ராஜீவ் பகவத் கூறியதாவது, அனைத்து மகளிர் மருத்துவ நிபுணர்களும் இதை அறிவுறுத்துகிறார்கள். தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஏதாவது நிலை இருக்கிறதா என்பதை முன்பே அறிய வேண்டும் என கூறினார்.

மற்றொரு மருத்துவர் பேசும்போது பொதுவாக 36,000 பெண்களில் ஒருவருக்கு இது ஏற்படும். இதயத்தில் நான்கு வால்வுகள் இருக்கிறது. அது ரத்தத்தை சரியான திசையில் செலுத்துகிறது. இதயம் அதன் வால்வுகளில் குறைபாடுகள் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top