Categories: சினிமா

மாட்டு கொட்டகையில தான் துணி மாத்துவன்… நெறய வாட்டி அழுதுருக்கேன்.. மனம் திறக்கும் ‘கிழக்கு சீமையிலே’ நடிகை அஸ்வினி..!

Spread the love

அஸ்வினி நம்பியார் என்று அழைக்கப்படும் ருத்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். அஸ்வினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது ஒரு மலையாள பத்திரிகைக்காக தனது வகுப்பு தோழிகளுடன் மாடலிங் பணிகளை செய்தார். அப்போது அந்த பத்திரிகையை பார்த்து இயக்குனர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். பாரதிராஜா அவர்களின் மூலம் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அஸ்வினி.

 

தொடர்ந்து தூரத்து சொந்தம், 1993 ஆம் ஆண்டு கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் அஸ்வினி. ஆத்தங்கர மரமே என்ற பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. தொடர்ந்து புதுப்பட்டி பொன்னுத்தாயி, முதல் பயணம், பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வினி. திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் சென்று செட்டிலான அஸ்வினி சிங்கப்பூரில் எடுக்கப்படும் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் அஸ்வினி சமீபத்தில் அளித்த பேட்டியில், எங்க காலத்தில் எல்லாம் சினிமாவில் நடிக்கும் போது கேரவன் கிடையாது. நான் ஆரம்பத்தில் நடிக்க வரும்போது டிரஸ் மாத்துறதுக்கு கூட ஒரு இடம் இருக்காது. ஏதோ ஒரு மறைவான இடத்தில் டிரஸ் மாத்திட்டு தான் அடிக்க சொல்லுவாங்க. சில நேரத்தில் என்னால முடியாது என்று சொல்லி கூட அழுது இருக்கேன். அப்போ கூட இருக்க சக நடிகைகள் நாங்க சேலையை வைத்து மறைத்துக் கொள்கிறோம் வாருங்கள் என்று கூட்டிட்டு போவாங்க. இதுதான் என்னுடைய முதல் படத்தின் அனுபவம். 1990 இல் இப்படித்தான் சினிமா இருந்தது.

அதன் பிறகு சில இடங்களில் ஷூட்டிங் நடைபெறும் போது அருகில் இருக்கக்கூடிய வீடுகளில் அனுமதி கேட்டு விட்டு அங்கு சென்று டிரஸ் மாற்றிக் கொள்ளுவோம். பிறகு சில வருட இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தின் சூட்ங்கில், மேடம் உங்களுக்காக கேரவன் ரெடியா இருக்கு என்று சொன்னப்போ எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. ஏதோ ஒரு வீட்டில அனுமதி கேட்டு சூட்டிங் தயாரான எனக்கு தனியா கேரவனா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு தான் இருந்தது. நிறைய முறை மாட்டு கொட்டகையில் டிரஸ் மாத்தி இருக்கேன். நான் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த போது ஆத்தங்கர மரமே பாட்டு எந்த அளவுக்கு ஹிட் ஆனதோ அதனைப் போலவே அந்த சமயத்தில் மலையாளத்திலும் மம்முட்டி சார் கூட நடிச்ச ஒரு படத்திலும் தும்பி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.

கேரளாவுல என்னை எங்க பார்த்தாலும் தும்பி என்றுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க. அதனைப் போலவே தமிழ் ரசிகர்கள் கூட கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த ஆத்தங்கர மரமே புகழ் நீங்கதானே என்றுதான் கூப்பிடுவாங்க. நான் திருமணம் முடிந்ததும் சினிமாவை விட்டு விலகுவேன் என சொல்லுவேன் என்று தான் பலரும் எதிர்பார்த்திருப்பாங்க. ஆனா எந்த ஒரு சூழலிலும் நான் அப்படி சொல்லவில்லை. சினிமா தான் என்னுடைய உயிர் மூச்சு. திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் சென்று இருந்த போது கூட நான் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். என்னுடைய மகள் ஓரளவு வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்றே கொடுக்கலாம் என்றுதான் இருந்தேன். சிங்கப்பூரில் இருந்த போது கூட எனக்கு இங்க வந்து மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருந்தது என அஸ்வினி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago