Categories: சினிமா

காஸ்டியூம் டிசைனுக்காக வர சொல்லி தப்பா நடந்து கொண்ட டைரக்டர்.. பல வருடம் கழித்து கிழக்கு சீமையிலே அஸ்வினி பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..!

Spread the love

அஸ்வினி நம்பியார் என்று அழைக்கப்படும் ருத்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். அஸ்வினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது ஒரு மலையாள பத்திரிகைக்காக தனது வகுப்பு தோழிகளுடன் மாடலிங் பணிகளை செய்தார். அப்போது அந்த பத்திரிகையை பார்த்து இயக்குனர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். பாரதிராஜா அவர்களின் மூலம் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அஸ்வினி.

தொடர்ந்து தூரத்து சொந்தம், 1993 ஆம் ஆண்டு கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் அஸ்வினி. ஆத்தங்கர மரமே என்ற பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. தொடர்ந்து புதுப்பட்டி பொன்னுத்தாயி, முதல் பயணம், பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வினி. திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் சென்று செட்டிலான அஸ்வினி சிங்கப்பூரில் எடுக்கப்படும் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் அஸ்வினை சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் ரொம்ப சின்ன வயசுல சினிமாவுல இருக்கும்போது ஒரு பெரிய டைரக்டர் காஸ்டியூம் டிசைனுக்காக நேரில் வர சொல்லி இருந்தார். அப்போ அவர் வருவார் என்று கீழே காத்திருந்தோம். அந்த சமயத்தில் வந்த மேனேஜர் சார் மேல இருக்காரு நீங்க மேல போய் பாருங்க என்று சொன்னார். எனக்கு அப்போ ரொம்ப சின்ன வயசு. ரொம்ப குழந்தைத்தனமா படிக்கட்டுல குதிச்சு குதிச்சு போயிட்டு இருந்தேன். அங்க போனதும் மேல இருந்த பெட்ரூம்ல இருந்து உள்ள வா என்று ஒரு குரல் மட்டும் கேட்டது.

ஏற்கனவே அந்த மலையாள டைரக்டர் கூட ஒன்றாக சேர்ந்து நான் வேலை பார்த்து இருக்கேன். அதனால எந்த தயக்கமும் இல்லாம அவர் கூப்பிட்டதும் நானும் உள்ள போனேன். உடனே அவங்க அவர் என்கிட்ட தப்பா நடந்துகிட்டார். அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு அதனால அங்க என்ன நடந்தது என்பது கூட எனக்கு தெரியல. படியில குதிச்சு குதிச்சு போன நான் கீழே வரும்போது அதற்கு நேர் எதிராக ஒன்றுமே புரியாமல் நடந்து வந்தேன்.

என்ன நடந்துச்சுன்னு என்னால புரிஞ்சுக்க கூட முடியல. வீட்டுக்கு போனது எங்கம்மா ஏன் ரொம்ப சோர்வா இருக்க என்று கேட்டதும் வேற வழி இல்லாம நடந்ததை சொன்னேன். என்னால தான் இப்படி ஆச்சு என்று சொல்லி எங்க அம்மா அழுதார்கள். உண்மையிலேயே நான் பண்ண தப்பால தான் அப்படி நடந்துச்சு என்று அன்னைக்கு நைட்டு ஃபுல்லா நான் யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அந்த வயசுல நடந்த அப்படி ஒரு சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது என்று அஸ்வினி எமோஷனலாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago