பெண்கள் சுயதொழில் தொடங்க குறைந்த வட்டியில் ரூ.1.25 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு… எப்படி பயன்பெறுவது..?

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் பலரும் சொந்தமாக தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் சூப்பரான கடன் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதிய குழு கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. குழு படங்கள் சுய உதவிக் குழு சார்பாக வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக 1.25 லட்சம் ரூபாய் வரை சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

இந்த கடனுக்கான மொத்த ஆண்டு வட்டி விகிதம் 6% ஆகும். இரண்டரை ஆண்டுகள் காலக்கெடுவுக்குள் இந்த கடன்களை திருப்ப செலுத்த வேண்டும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் வழங்கப்படும் இந்த கடனை பெறுவதற்கு சுய உதவி குழுவில் உறுப்பினராக இருப்பது அவசியமாகும். அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் கொண்ட சுய உதவிக் குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயது வரை உடையவராகவும் அவருடைய ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருப்பது அவசியம்.

இந்த திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற முடியும். ஆன்லைன் மூலம் டாப்செட் கோவின் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிறப்பிடச் சான்றிதழ் மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். சீர் மரபினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆஃப்லைன் மூலமும் விண்ணப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வழங்கும் புதிய திட்டம் ஒன்றையும் தமிழக அரசு அறிமுகம் செய்து வைத்தது. பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பாக 50,,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் ஆதரவற்ற மற்றும் நலிவுற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் நிதி உதவி பெறலாம். விண்ணப்பதாரர் தங்கள் மாவட்ட சமூக அலுவலர் அணுகி ஐம்பதாயிரம் ரூபாய் சுய தொழில் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago