#image_title
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மாபெரும் அளவில் ஹிட்டானது. மேலும் சிவகார்த்திகேயன், ரோகினி, சுனிதா, பானுப்பிரியா, பிரபு, கேப்ரியல்லா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
3 திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தயாரித்தார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் 3 படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைக்காலஜிக்கல் திரில்லர் பணியில் படத்தை இயக்கியிருந்தார்.
கடந்தாண்டு மூன்று திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அங்கு ரசிகர்கள் 3 படத்திற்கு நல்ல வரவேற்பை அளித்தனர். கடந்த ஆண்டு 3 திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆண் நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. முதலில் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை தேர்வு செய்துள்ளனர்.
ஆனால் தேதி பிரச்சனை காரணமாக ஸ்ருதிஹாசனுக்கு பதில் அமலாபாலை கமிட் செய்தனர். அவரும் தனுஷும் இணைந்து நடிக்கும் சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. அதன் பிறகு ஸ்ருதிஹாசன் மீண்டும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததால் அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதிஹாசனை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும்…
திரையிசை உலகில் பல தசாப்தங்களாகத் தன் இசையால் ராஜ்யம் நடத்தி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு, காப்புரிமை வழக்கில் பெரும் பின்னடைவு…
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் மாநில தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் டெல்லி வரை பலமாக எதிரொலிக்கத்…