தனுஷின் 3 படத்தில் கமிட் ஆன பிறகு ஐஸ்வர்யாவால் வெளியேற்றப்பட்ட பிரபல நடிகை.. அதுக்கு காரணம் ஸ்ருதிஹாசனா..?

By Priya Ram

Published on:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மாபெரும் அளவில் ஹிட்டானது. மேலும் சிவகார்த்திகேயன், ரோகினி, சுனிதா, பானுப்பிரியா, பிரபு, கேப்ரியல்லா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

   

3 திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தயாரித்தார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் 3 படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைக்காலஜிக்கல் திரில்லர் பணியில் படத்தை இயக்கியிருந்தார்.

கடந்தாண்டு மூன்று திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அங்கு ரசிகர்கள் 3 படத்திற்கு நல்ல வரவேற்பை அளித்தனர். கடந்த ஆண்டு 3 திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆண் நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. முதலில் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் தேதி பிரச்சனை காரணமாக ஸ்ருதிஹாசனுக்கு பதில் அமலாபாலை கமிட் செய்தனர். அவரும் தனுஷும் இணைந்து நடிக்கும் சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. அதன் பிறகு ஸ்ருதிஹாசன் மீண்டும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததால் அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதிஹாசனை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

author avatar
Priya Ram