வெள்ளை நிற உடையில் அப்படியே ஏஞ்சல் போல மாறிய அதிதி சங்கர்.. பார்த்ததும் ஆளை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவரின் இளைய மகளான அதிதி சங்கர் கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

   

டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சினிமாவில் நுழைந்தார். அதன்படி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான அதிதி சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது அதிக அளவு விளம்பர படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்திலும் இவர் ஹீரோயினியாக நடித்துள்ளார்.

நடிப்பு மற்றும் பாடல் என ஏகப்பட்ட திறமைகளை கொண்டுள்ள அதிதி சங்கர் மொக்கை ஜோக்கு சொல்வதிலும் வல்லவர்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி சமீப காலமாக ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini