தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அபிராமி. இவர் தமிழில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தின் மூலம் தான். அதனைத் தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன்,சமுத்திரம் உள்ளிட்டா பல திரைப்படங்களில் நடித்தார்.
இப்படி பிசியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அமெரிக்காவில் செட்டிலான அபிராமி கடந்த வருடம் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து மகளுக்கு கல்கி என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். தனது மகள் குறித்த ஒரு பேட்டியில் அபிராமி கூறும்போது, சிறுவயதில் இருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
அதை தான் இப்போது செய்தேன். என்னுடைய மகனுக்கு கல்கி என பெயர் வைக்க காரணம் கல்கி ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன். பெண்ணால் தான் அதனையும் மாற்ற முடியும் என்று அவர் கூறினார். இந்நிலையில் அபிராமி சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்தும் கணவருடனான நட்பு பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க