360 ஏக்கர் சொத்து.. நொடி பொழுதில் ஏழையான ராஜமௌலியின் குடும்பம்.. பலரும் அறியாத குடும்ப வறுமை..!!

By Nanthini

Published on:

பிரபல திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாந்தின் மகன்தான் ராஜமவுலி. இவர் தன்னுடைய தந்தையை போலவே சினிமாவின் மீது தீராத காதல் கொண்டிருந்தார். உலக அளவில் பிரபலமான இந்திய இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி சமீபத்தில் அனைத்து ஹாலிவுட் இயக்குனர்கள் பார்வையும் கவர்ந்தார். முதன் முதலில் கே ராகவேந்திரா ராவ் வழிகாட்டுதலின் தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த நிலையில் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தில் ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்து இயக்கினார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் பேசப்பட்டன.

   

இந்தியாவிற்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கார் விருதையும் தட்டி சென்றார். அதன் பிறகு இறுதியாக இவர் இயக்கிய RRR படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டான நிலையில் அதில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த நிலையில் தனது குடும்ப வறுமை குறித்து ராஜமௌலி பேசியுள்ள ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ராஜமவுலி குடும்பம் ஆரம்பத்தில் பணக்கார குடும்பமாக இருந்துள்ளது. 300 ஏக்கர் சொத்தும் இருந்துள்ளது. ஆனால் ராஜமவுலி சுமார் பத்து வயது இருக்கும்போது மொத்த சொத்தும் விற்று விட்டார்களாம்.

அதன் பிறகு மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்து ஒரு பெட் ரூம் அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு தங்கி உள்ளனர். 13 பேர் வீட்டில் இருந்தாலும் ராஜமௌலியின் அண்ணன் மட்டும் தான் சம்பாதித்துள்ளார். அதை வைத்து வாடகை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்க்க வேண்டிய நிலை இருந்துள்ளது. 22 வயது வரை ராஜமௌலியும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஏதாவது செய்ய என அப்பா தொடர்ந்து சொன்னதால்தான் ராஜமௌலி வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு பணியாற்றத் தொடங்கியுள்ளார். தற்போது முன்னணி இயக்குனராகவும் பல கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரராகவும் ராஜமவுலி உள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

motive_mantra001 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@motive_mantra001)

author avatar
Nanthini