தமிழ் சினிமாவில் கேஆர் விஜயா என்ற பெயரை கேட்டால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புன்னகை அரசி என புகழப்பட்டு வரும் இவர் 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.
இவருடைய தங்கை கேஆர். வத்சலா. இவர் சமீபத்தில் தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். கேஆர் விஜயா மரணம் அடைந்து விட்டார் என்றெல்லாம் செய்து வெளியாகி வருகின்றது. ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடன் பூஜை புனஸ்காரம் என்று நன்றாக இருந்து வருகின்றார். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. இது போன்ற செய்திகளை எல்லாம் கேட்டு அவர் கவலைப்பட மாட்டார்.
நானும் என் அக்காவும் சாப்பாட்டை பற்றி கோவில்களை பற்றி அதிகமாக பேசுவோம். என் அக்கா ஷூட்டிங் போவதற்காகவே தனி விமானம் ஒன்றை வைத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் 4 கப்பல்களையும் அவர் வைத்திருந்தார். என்னுடைய நெருங்கிய தோழி சாந்தி வில்லியம்ஸ், சத்யபிரியா, குயிலின், நளினி உள்ளிட்டோர். விஜயகாந்த் மரணம் என்னை மிகவும் பாதித்தது. அவரிடம் இருக்கும்போது அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் போக முடியவில்லை. நடிகை ஸ்ரீவித்யா இறப்பு மிகுந்த அளவு தன்னை பாதித்தது. அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது மருத்துவமனையில் சென்று பார்க்க நினைத்தேன். ஆனால் அவர் யாரையும் பார்க்க வர வேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர் சில நாட்களில் அவரின் இறப்புச் செய்தி கிடைத்தது. நான் என் கணவரை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
என் குழந்தைகள் எனக்கு தற்போது வரை ஆறுதலாக இருந்து வருகிறார்கள். நானும் அவரும் சேர்ந்து 28 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றோம். திருமதி செல்வம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்கு திருமணம் நடைபெற்றது என்று தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருந்தார் கே ஆர் வத்சலா.