தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துவரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் அஞ்சலி.
அதைத் தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் கேம்ஸ் ஆப் கோதாவரி என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் அடிக்கடி திருமண சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
33 வயதான போதிலும் அழகு குறையாமல் இருந்து வரும் அஞ்சலி டிரான்ஸ்பரென்ட் சேலையில் அழகாக போட்டோ சூட் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.