Categories: சினிமா

“இனம் புரியாத உணர்வு”… சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து.. பாபாஜி கோவிலில் தியானம் செய்த பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோஸ்..!!

Spread the love

இளம் நடிகை ஆத்மிகா நடிகரும்- இசையமைப்பாளருமான ஹிப்பாப் ஆதியுடன் மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் ஆத்மிகா நடித்துள்ளார்.

இந்நிலையில் ஆத்மிகாவின் ஆன்மீகப் பயணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் இமயமலைக்கு சென்று பாபாஜி கோயில் தியானம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தென்னிந்தியா வட இந்தியாவில் இருக்கும் திருத்தலங்களுக்கு சென்று வந்தாலும் இமயமலையில் இருக்கும் பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு செல்வது சற்று கடினம்.

கடுமையான குளிர் மற்றும் அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதால் வயதானவர்கள் அங்கு செல்ல சிரமப்படுவார்கள். இந்நிலையில் இமயமலைக்கு சென்ற போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆத்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ஆத்மிகா கூறியதாவது, இந்த பயணம் ஆன்மாவின் அழைப்பு என்பதை நான் உணர்ந்தேன்.

ஒரு தெய்வீக அழைப்பு எனக்கு வந்தது. எதைப்பற்றியும் யோசிக்காமல் கிளம்பி சென்றேன். இது ஒரு கஷ்டமான பயணமாகவும், மரண பயத்தை எதிர்க்கும் பயணமாகவும் இருந்தது. உன்னதமான அனுபவங்கள் எளிதில் கிடைத்து விடுவது இல்லை. நான் பாபாஜி குகையில் தியானத்தில் அமர்ந்த போது அந்த தியானம் ஆழமானதாக ஆரம்பிக்கப்பட்டது.

என் வாழ்வில் இதற்கு முன்பு இது போன்ற சக்தியை நான் உணர்ந்தது இல்லை. தியானத்திற்கு பிறகு எனது முழு பார்வையும் மாறியது போல உணர்ந்தேன். நிபந்தனை இல்லாமல் அவரை எனது குருவாக ஏற்றுக் கொண்டேன்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒருமுறையாவது பாபாஜி குகைக்கு வந்து தியானம் செய்து அனுபவத்தை அனுபவிக்க வேண்டும் என உணர்வுபூர்வமாக ஆத்மிகா கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் இமயமலைக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

8 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

17 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

30 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

35 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

40 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

44 minutes ago