#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.
இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வருகிற ஏப்ரல் 26 அன்று ரத்னம் திரைப்படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் நடிகர் விஷால் தீவிரமாக இறங்கியுள்ளார். மேலும் ரத்னம் படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய அவர், ‘சின்ன திரைப்படங்களுக்கு நான் சொல்ற ஒரே விஷயம். நீங்க ஏன் என்ன கேக்குறீங்க..? தோனியை போய் கேளுங்க. அவர் சிக்சர் அடிக்கும்போது நம்ம விசில் அடிக்கிறோம்ல. அவரும் ஒரு படம் எடுத்தாரு. அவர் கிட்ட மைக் நீட்டி கேளுங்களேன்.
எவ்ளோ திரும்ப வந்ததுன்னு. நீங்க கேளுங்க..? உங்களுக்கு அந்த பதில் வரும். ஏன் என்ன கேக்குறீங்க..? நானும் சின்ன படங்கள் எடுத்து இருக்கேன். ‘ஜீவா’ -ன்ற சின்ன திரைப்படம் எடுத்தேன். அப்போ ஜெயலலிதா அம்மா அரெஸ்ட் ஆனாங்க. அதனால எல்லா திரையரங்கத்தையும் மூடுங்கன்னு சொன்னாங்க. போச்சு எனக்கு அப்படியே 4 கோடி, 5 கோடி போச்சு’ என்று டென்ஷனாக பேசியிருந்தார் விஷால். இதோ அந்த வீடியோ…
2026 டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியின் போது, ஜஸ்பிரித் பும்ராவின் அதிவேக யார்க்கர் பந்து…
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற…
சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தில், மணமகளின் சகோதரர் மணமகன் வீட்டாருக்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளைப் பரிசாக…
சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து 'கேம் ஆப் லோன்ஸ்' பட நடிகை எஸ்தர் நோரானா…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று, சசிகலா 'அம்மா அதிமுக' என்ற புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத்…
பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாருடன் ராஜா என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்தார். அப்போது அஜீத்குமாரை ஷூட்டிங் இடைவேளையில்…