பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாருடன் ராஜா என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்தார். அப்போது அஜீத்குமாரை ஷூட்டிங் இடைவேளையில் வடிவேலு ஒருமையில் அழைத்து பேசியதால் கடுப்பான அஜீத்குமார், இனி வடிவேலு தனது படங்களில் நடிக்க கூடாது என உத்தரவே போட்டுள்ளார். அது இன்று வரை தொடர்கிறது.
படிக்காதவன் என்ற படத்தில் தனுஷ் உடன் வடிவேலு சில நாட்கள் அலர்ட் ஆறுமுகம் கேரக்டரில் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளில் அவர் நடிக்க மறுத்து அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதன்பிறகு தான் அலர்ட் ஆறுமுகம் என்ற கேரக்டரில் உள்ளூர் தாதாவாக நடித்து காமெடியில் நடிகர் விவேக் அசத்தியிருப்பார்.
இந்த படத்தில் தமன்னாவின் அப்பா நடிகர் சுமன் காலை பிடித்து அமுக்குவது போன்ற காமெடி காட்சியில் விவேக் யதார்த்தமாக நடித்திருப்பார். அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மறுத்துதான் நடிகர் வடிவேலு விலகியிருப்பார் என்று தெரிகிறது. அத்துடன் நடிகர் தனுஷூடன் இதுவரை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கூட இணைந்து நடித்தது இல்லை. படிக்காதவன் படம் ஒன்றுதான் அவர் சில நாட்கள் நடித்து விலகிய படம் என்பதும் ரசிகர்கள் அறியாத ஷாக்கான டிவிஸ்ட் ஆக உள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…