Connect with us

CINEMA

APJ அப்துல் கலாம் நினைவு நாளுக்கு மரக்கன்றுகளை நட்ட நடிகர் விஷால்… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஷால். இவரின் முழு பெயர் விஷால் கிருஷ்ண ரெட்டி. இவர் தந்தை தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி ஆவார். இவர் தொன்போசுகோ என்ற பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.லயோலா  கல்லூரியில்  மேற்படிப்பு  படித்தார்.

   

இவரது பேராசிரியர் ராஜநாயகம் தந்த  ஊக்கத்தின் மூலமாக நடிப்புத் துறையில் நடிக்கதுவங்கினார்.இவர் முதலில் 2004 ஆம் ஆண்டு ‘செல்லமே’ படத்தில் ரகுநாதன் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து இவர்’ சண்டக்கோழி’ படத்தில் பாலு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதன்பிறகு ‘தாமிரபரணி என்ற படத்தின் மூலமாக தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இவர் தமிழில் அவன் இவன் ,பாண்டியநாடு, பூஜா, ஆம்பள, மருது, கத்தி சண்டை, துப்பறிவாளன், சண்டைக்கோழி, இரும்புத்திரை, என பல படங்கள்  நடித்துள்ளார்.இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட இவர் ‘பூஜா’, ‘ஆம்பள’ போன்ற படங்களை தயாரித்துள்ளார்.நடிகர் விஷால் நடிகர் அர்ஜுனிடம் ‘வேதா’ ‘ஏழுமலை’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இவர் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, போன்ற  மொழி   படங்களில் நடித்துள்ளார்.நடிகர் விஷால் தற்போது தமிழ் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற பதவியிலும் உள்ளார்.நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக  உள்ளது.

இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வாகை சூட வா மற்றும் லத்தி படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.இவருக்கு அடுத்ததாக மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளது.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.தற்போது நடிகர் விஷால் APJ அப்துல் கலாம் நினைவு நாளுக்கு மரக்கன்றுகள் நட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top